“அன்று பிரதமர் இன்று முதல்வர்”….. மேடையில் அரங்கேறிய அதே சம்பவம்…. வைரலாகும் செஸ் ஒலிம்பியாட் வீடியோ….!!!!

சென்னை 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் பலரையும் வியக்க வைக்கும் வகையில் விழா நடைபெற்றது.

அந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் பலர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன்படி முதலில் நடைபெற்ற மணல் ஓவியத்தில் இருந்து வரிசையாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட நடிகர்கள் என பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதல் பஸ்ட் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி இடம் ஒலிம்பியாட் ஜாதியை வழங்கினார். பின்னர் இளம் க்ராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உட்பட 3 பேர் செஸ் ஒலிம்பியா ஜோதியை ஏற்றி வந்தனர். கடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஓடி கையில் ஜோதியை வாங்கியதும் இந்த 44வது ஒலிம்பியாட் போட்டியில் முதல்வர் கையில் ஒலிம்பியாட் ஜோதியை வாங்கிய  வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.