போனி கபூரை சந்தித்த ரஜினிகாந்த் மகள்…. கேள்வி எழுப்பும் அஜித் ரசிகர்கள்…. காரணம் என்ன தெரியுமா?…..!!!!

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் சமீபத்தில் பரஸ்பரம் பிரிந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். ஒரு பக்கம் ஹிந்தியில் படத்தில் நடித்து வர, மறுபக்கம் தனது உடலை பிட்டாக வைக்க சைக்கிளிங் மற்றும் ஜிம் என நேரத்தை செலவிட்டு வருகின்றார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை சமீபத்தில் சந்தித்து பேசினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அஜித் ரசிகர்கள் அனைவரும் அவரை கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். அதாவது தற்போது அஜித் நடித்து வரும் ஏகே 61 படத்தின் அப்டேட் கொடுங்க என்று அவரிடம் கேட்டு வருகிறார்கள்.