விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ-களின் மிக முக்கியமான ஒன்றுதான் குக் வித் கோமாளி. இதில் அவர்கள் செய்து அசத்தும் சமையல் மட்டுமல்லாமல் காமெடிகளும் இடம்பெற்று இருக்கும். ஒரு பக்கம் போட்டியாளர்கள் சமையல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் வேளையில் மறுபக்கம் கோமாளிகள் அந்த அரங்கையே சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.

அதன் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி இது. இதனை காண்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது வரை இதில் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் போட்டியாளர்கள் மட்டுமே மாற்றப்பட்டார்கள். கோமாளிகள், நடுவர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் என அனைவரும் முதல் சீசனில் இருந்து அப்படியே பயணித்துக் கொண்டிருந்தனர்.

அதன்படி இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக சில நேரங்களில் போட்டியாளர்களுக்கு உதவியாக மறுபக்கம் கோமாளிகளுடன் கோமாளியாக பன்முகம் காட்டி களம் இறங்கியவர் தான் ரக்சன். கடந்த இரண்டு சீசர்களை தொகுத்து வழங்கி வந்த இவர் மூன்றாவது சீசனில் இறுதி நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. திடீரென அவர் ஏன் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் என்பதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் குழம்பி நின்றனர்.

இது தொடர்பாக ரக்சன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இறுதி நிகழ்ச்சியின் போது எனக்கு கடுமையான ஜுரம், கொரோனா இருக்குமோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதனால் தனிப்பட்ட சில காரணங்களுக்காக என்னால் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க வர முடியவில்லை என்று அவர் பேசி உள்ளார். மேலும் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் மறுபக்கம் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
