டிவி சீரியல் நடிகைகளில், குடும்ப பாங்கான தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ரக்சிதா மகாலட்சுமி. கடந்தாண்டு, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பார்வையாளர்களின் அதிக கவனத்தை ஈர்த்தார்.
தமிழ் சினிமாவில், ஆரம்ப காலத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சிநேகா. ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு, சினிமாவில் தொழில் போட்டியை சமாளிக்க, சிநேகாவும் கிளாமருக்கு மாறி, சில படங்களில் நடித்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதேே போல், சின்னத்திரையில் ஹோம்லி லுக்கில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ரக்சிதா மகாலட்சுமியும், இப்போது திடீரென கிளாமருக்கு மாறி இருக்கிறார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ரக்சிதா மகாலட்சுமி, அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். இந்நிலையில், சமீபமாக அப்டேட் செய்யப்படும் அவரது கிளாமரான புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் ஷாக் ஆகி வருகின்றனர்.
உடலின் பாகங்களை அப்பட்டமாக காட்டும் மாடர்ன் டிரஸ்களில் அம்மணி, அலப்பரையை கூட்டி வருகிறார். ஹோம்லி லுக்கில் அசத்தலாக காட்சி தரும் ரக்சிதா இப்படி திடீரென கவர்ச்சிக்கு மாறி விட்டாரே, என அவரது ரசிகர்கள் பலரும் புலம்புகின்றனர்.

டிவி சீரியல் நடிகைகள் பலரும், தங்களது சமூகவலைதள பக்கங்களில், கவர்ச்சி ஆடைகளில் வீடியோக்களை, புகைப்படங்களை அப்டேட் செய்துவரும் நிலையில், தொழில் போட்டியை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் ரக்சிதாவும் கடைசியில், கிளாமருக்கு மாறி விட்டாரே, எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்க துவங்கி இருக்கின்றனர்.நடிக்கும் திறமை நிறைய இருந்தாலும், இந்த காலகட்டத்தில் சினிமாவிலோ, டிவியிலோ நடிகைகள் நிலைத்திருக்க வேண்டும் என்றால், அதற்கு தாராளமாக கவர்ச்சி காட்ட வேண்டிய டிரெண்டிங் உருவாகி இருக்கிறது. அதனால், ரக்சிதா மகாலட்சுமியும் கவர்ச்சிக்கு மாறிவிட்டார் என்கின்றனர் ரசிகர்கள்.

குடும்ப பாங்காக நடித்தால் என்ன, கவர்ச்சியாக நடித்தால் என்ன, ரசிகர்களுக்கு என்ன வேண்டுமோ, அதை எடுத்துக்கொள்கின்றனர். அதனால், ரக்சிதா மகாலட்சுமி கவர்ச்சிக்கு மாறியது தவறில்லை என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.