பிரபல சீரியல் நடிகை யான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் அண்மையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் மத்தியிலும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஏனென்றால் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் நடந்திருப்பது உண்மை இல்லையா அல்லது ஏதாவது சூட்டிங்கா என்று நம்புவதற்கு சில நாட்கள் ஆகிவிட்டது.

அதன் பிறகு அதிகாரபூர்வமாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணம் குறித்து அறிவித்த நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இவர்களின் திருமணம் குறித்த விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.திருமணம் முடிந்த இத்தனை நாட்கள் ஆகியும் அவர்கள் குறித்த விமர்சனங்கள் என்னும் ஓயவில்லை.

இருந்தாலும் இதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரின் விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.அதனைப் போலவே தவறாக விமர்சிக்கும் பலருக்கும் மகாலட்சுமி பொறுமையாக தங்களின் திருமணம் குறித்த பதில்களையும் அவர் கூறி வருகிறார். இதனிடையே பல youtube சேனல்களுக்கும் இவர்கள் ஒன்றாக பேட்டி அளித்து வருகின்றன. அது மட்டும் அல்லாமல் இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் மற்றும் அவுட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் விஜய் டிவியில் இந்த ஜோடியை பேட்டி எடுக்க அழைத்துள்ளனர். இதில் இவர்களுக்கு ஒரு டாஸ்க் என கூறி அவமானப்படுத்தி உள்ளனர். அதாவது ஒருவரை பற்றி ஒருவர் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் இந்த டாஸ்க்.இதில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளாமல் அமர்ந்திருக்க வேண்டும்.

அதே சமயம் இருவரும் ஒரே பதிலை கூறினால் அவர்களுக்கு மார்க் வழங்கப்படும். அதற்காக இருவரது கையில் ஆண் மற்றும் பெண் செருப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கேள்விக்கு பதில் மகாலட்சுமி என்றால் பெண் செருப்பை காட்ட வேண்டும். அதுவே ரவீந்தர் என்றால் ஆண் செருப்பை காட்ட வேண்டும். இவ்வாறு அவர்களின் கையில் செருப்பை கொடுத்து விஜய் டிவி கேவலப்படுத்தியுள்ளது.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது.