இயக்குனர் விக்னேஷ் சிவன் -நடிகை நயன்தாரா ஜோடியின் திருமணம் கடந்த மாதம் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி நடந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்த திருமணம் நடந்ததால் புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து விக்னேஷ் சிவன் அவ்வபோது ஒவ்வொரு புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

கிட்டத்தட்ட இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திருக்கு ஹனிமூன் சென்ற நயன்தாரா -விக்னேஷ் தம்பதியினர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

அங்கு படப்பிடிப்பில் கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா தோலில் சாய்ந்த படி விக்னேஷ் சிவன் செய்த ரொமான்டிக் புகைப்படங்கள் இணையதளத்தில் வலம் வருகின்றன. இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் விக்னேஷ் சிவனை கலாய்த்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.