அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா…. நேரில் சென்று நலம் விசாரித்த நாக சைதன்யா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனிடையே சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் அரிய வகை நோய் ஒன்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

அதாவது சமந்தாவிற்கு மையோ சிடிஸ் என்று அரிய வகை நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டி திரையுலகினர்  பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் ரசிகர்கள் பலரும் சமந்தாவுக்கு ஆறுதலாக சில வார்த்தைகளை நேரில் சென்று நாக சைதன்யா கூற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே சமந்தாவை மருத்துவமனையில் நாக சைதன்யா சென்று பார்த்ததாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து இரு தரப்பினரும் விசாரித்த நிலையில் இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்.