சான்சே இல்ல…. 41 வயதிலும் அப்படி ஒரு அழகு…. குடும்பத்துடன் க்யூட் புகைப்படம் வெளியிட்ட நடிகை சன்னி லியோன்….!!!!

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார். பாலிவுட்டை தொடர்ந்து தற்போது தமிழில் வீரமாதேவி மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதனைப் போலவே சாம்பியன் என்ற கன்னட திரைப்படத்திலும் சன்னிலியோன் நடித்து வருகிறார். இன்றளவும் இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன்னிலியோனுக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தற்போது இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தியை நடிகர் நடிகைகள் தனது குடும்பத்துடன் கொண்டாடிய நிலையில் சன்னி லியோன் தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட அழகான குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.அது மட்டுமல்லாமல் 41 வயதிலும் சற்றும் இளமை குறையாமல் சன்னி லியோன் அப்படியே இருப்பதாகவும் பலரும் கமண்ட் செய்து வருகிறார்கள்.