தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் அண்மையில் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்ற பெருமையைப் பெற்றார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சிறந்த நடிகையாக வலம் வருபவர் இவர்.

இந்தியில் இவரது நடிப்பில் வெளியான தீ ஃபேமிலி மேன் 2 தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இவரது நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் சமந்தா இணைந்து நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அல்லு அர்ஜுன் உடன் இணைந்து புஷ்பா திரைப்படத்தில் சமந்தா போட்ட குத்தாட்டம் பட்டி தொட்டி எல்லாம் வைரலானது. ஊ சொல்றியா மாமா என்ற அந்த பாடலில் தன்னுடைய கவர்ச்சி மழையை பொழிந்தார் சமந்தா. அப்படம் வசூலிலும் விமர்சனத்திலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு சமந்தா போட்ட குத்தாட்டமும் ஒரு காரணம்தான்.

இவர் சமீபத்தில் நாகசைதன்யாவை விவாகரத்து செய்யும் முடிவை வெளியிட்டு இருந்தார். தற்போது சமந்தா விஜய் தேவகொண்டாராவின் நடிப்பில் உருவாகி வரும் குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் இவர் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்களை சமந்தா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
