இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் விருமன். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முறையாக ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார்.

இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஒரு பாடலையும் அதிதி சங்கர் பாடியுள்ளார். முதல்முறையாக ஹீரோயினியாக அறிமுகமான படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளார் அதிதி சங்கர்.

இதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அவ்வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.

இதனிடையே நடிகை அதிதி சங்கர் சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ படிப்பில் பட்டப் படிப்பை முடித்தார். இந்நிலையில் அவர் பத்தாம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் வாங்கிய மதிப்பெண் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.இந்த தகவலை அதிதி சங்கர் ஒரு பேட்டியில் கூறிய நிலையில் தற்போது அந்த மார்க் குறித்த விவரங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
1. Science – 99 Mark
2. Mathematics – 97 Mark
3. French – 97 Mark
4. Social studies – 91 Mark
5. English – 91 Mark