எதுக்கு சார் இவ்வளவு அலப்பறை?…. காரின் மீது பயணித்து கெத்து காட்டிய பிரபல நடிகர்….. வீடியோவை பார்த்து திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…..!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பவன் கல்யாண். இவரை அனைவரும் பவர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் இளைய தம்பி தான்.இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞர் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் முதன்முதலாக 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அடுத்தடுத்து இவரின் நடிப்பில் வெளிவந்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை உருவாக்கிய நிலையில் ஜனசேனா கட்சி என பெயரிடப்பட்டு நடத்தி வருகிறார்.

இவர் சினிமா நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பேசும் வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகும். இந்நிலையில் அவர் காரின் மேல் பயணித்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. பவன் கல்யாண் ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதியில் இப்டான் என்ற கிராமத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் ஒரு பெரிய பட்டாளத்தை கூட்டிக்கொண்டு காரில் கால்களை நீட்டியபடி மேலே அமர்ந்து கொண்டு சென்றுள்ளார்.

இதற்கு காவல்துறையும் அனுமதிக்காத நிலையில் குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்திய நிலையில் அவர் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.