சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து பிரின்ஸ் மட்டும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சிவ கார்த்திகேயன் டெலிவிஷனில் வேலை பார்த்த போதே அவரின் மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது திருமண நாளை நேற்று கொண்டாடியுள்ளார்.சினிமாவில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தனது 12வது திருமண நாளை மனைவி ஆர்த்தியுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
♥️♥️ pic.twitter.com/AA8nTabTmN
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 27, 2022