தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில் பாதி திரைப்படங்கள் மட்டுமே வெற்றியை காண்கின்றன. அதிலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தேசிய விருதை பெறும். அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் தேசிய விருது பல்வேறு படங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்திய திரை உலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது தான்.

ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில் வெளியான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.அவ்வகையில் சமீபத்தில் 68 வது தேசிய விருதை பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழ் திரைப்படங்களுக்கு மொத்தம் பத்து விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இதுவரை சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர்கள் ஐந்து தமிழ் நடிகர்கள் மட்டும்தான் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ் திரை உலகில் எம்ஜிஆர், கமல்ஹாசன், விக்ரம், தனுஷ் மற்றும் சூர்யா என இவர்கள் ஐந்து பேர் மட்டும் தான் இதுவரை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
