இவ்வளவு ஒரு அழகிய வீடா?…. நடிகர் பாக்கியராஜ் பிறந்து, வளர்ந்த வீடு இதுதான்…. இன்றும் ஒரு பொக்கிஷம்….!!!!

தமிழ் சினிமாவில் இன்றளவும் முன்னணி நடிகராக திகழ்வர் பாக்கியராஜ். அவர் நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் அவரின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரசிகர்கள் அந்தப் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இவரின் படங்களுக்கு பெண் ரசிகர்களின் வரவேற்பு எப்போதும் அதிக அளவில் இருக்கும். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், எழுத்தாளர்,இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

இவர் முதன்முதலாக பிரவீனா என்பவரை கடந்த 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் உடல் நல குறைவு காரணமாக அவர் திடீரென உயிரிழந்ததால் 1984 ஆம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு என்ற ஒரு மகன் உள்ளார்.

அவரும் தற்போது திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார். தன் அப்பாவை போலவே சாந்தனவும் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். நடிகர்களின் அன்சீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பாக்கியராஜ் வாழ்ந்து வந்த வீடு குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது பாக்கியராஜ் சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்கோவில். அங்கு தனது பெற்றோருடன் வாழ்ந்த வீட்டை இன்றும் பாக்கியராஜ் பாதுகாத்து வருகிறார். அவர் பிறந்து வளர்ந்த வீட்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.