பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீர் விபத்து…. ஐஸ்வர்யாவை தள்ளி விட்ட மீனா….. வைரலாகும் வீடியோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாச கதை காண்போரை நெகிழ வைத்துள்ளது.

இந்த சீரியலுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் தற்போது பல திருப்பங்கள் நடந்து சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் மற்றும் முல்லை ஜோடி தான் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது என்று கூறலாம்.

இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், வெங்கட் ரங்கநாதன், ஹேமா, ராஜ்குமரன், தங்கராஜன், காவிரி அறிவுமணி, சரவணன் விக்ரம் மற்றும் சாய் காயத்ரி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி ஷூட்டிங் சமயத்தில் ஹேமா லேசாக தள்ள தடுமாறி சாய் காயத்ரி கீழே விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.