மனைவியை போல டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் நடிகர்…. காரணம் என்ன தெரியுமா?….. வைரலாகும் புகைப்படம்….!!!!!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விமல். முதலில் கிரீடம் மற்றும் குருவி உள்ளிட்ட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த இவர் பசங்க என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த களவாணி, தூங்கா நகரம் மற்றும் வாகை சூடவா உள்ளிட்ட பல படங்கள் ஹிட் கொடுத்தன.

தற்போது 7 தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விமலின் மனைவி அக்ஷயா சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கர்ப்பமாக இருந்த காலத்திலும் விடுமுறை எடுக்காமல் நோயாளிகளுக்கு சேவை செய்ததால் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் நடிகர் விமலுக்கு தற்போது அமெரிக்க நேஷனல் பிசினஸ் யூனிவர்சிட்டி என்ற அமைப்பு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. சென்னையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் டாக்டர் பட்டத்தை வழங்கிய புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள். விமலின் மனைவி எம்பிபிஎஸ் டாக்டர் என்ற நிலையில் தற்போது அவரும் கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளதால் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.