தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில் பாதி திரைப்படங்கள் மட்டுமே வெற்றியை காண்கின்றன. அதிலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தேசிய விருதை பெறும். அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் தேசிய விருது பல்வேறு படங்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி 68 வது தேசிய விருது குறித்த பட்டியலில் இரண்டு தமிழ் திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளனர்.

அதில் சூர்யா நடித்த சூழரைப் போற்று திரைப்படம் மட்டுமே மொத்தம் ஐந்து விருதுகளை அள்ளி உள்ளது. இப்படியான நிலையில் ஒரே திரைப்படம் அதிக தேசிய விருதை பெற்றுள்ள திரைப்படம் எது என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சூர்யா நடித்த சூழரைப் போற்று திரைப்படம் ஐந்து விருதுகளை பெற்றது.
சிறந்த நடிகர்- சூர்யா
சிறந்த நடிகை – அபர்ணா பால முரளி
சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா ஷாலினி உஷா நாயர்
சிறந்த பின்னணி – இசை ஜீவி பிரகாஷ் குமார்
சிறந்த திரைப்படம் – சூரரை போற்று.

அதனைப் போலவே 2010 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை அள்ளி உள்ளது.
சிறந்த நடிகர் – தனுஷ்
சிறந்த இயக்கம் – வெற்றிமாறன்
சிறந்த நடனம் – தினேஷ்குமார்
ஸ்பெஷல் ஜூரி விருது – ஜெயபாலன்
சிறந்த திரைக்கதை – வெற்றிமாறன்.

மேலும் 2002 ஆம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டாய் என்ற திரைப்படம் அதிக விருதுகளை பெற்ற தமிழ் திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த இயக்குனர் – மணிரத்தினம்
சிறந்த இசையமைப்பாளர் – ஏ ஆர் ரகுமான்
சிறந்த பாடலாசிரியர் – வைரமுத்து
சிறந்த குழந்தை – நட்சத்திரம் கீர்த்தனா
சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், ஸ்ரீதர்.
சிறந்த ஒளிப்பதிவு – எ.எஸ் லக்ஸ்மி நாராயனன்.
