“அந்த கதை இப்போது இல்லை”…. விவாகரத்து குறித்து சமந்தாவின்…. அப்பா போட்ட உருக்கமான பதிவு….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் ஊ  சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர். அது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக உள்ளனர். சமந்தா தற்போது நான்கு ஐந்து படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் அண்மையில் இந்தியாவின் டாப் நடிகைகளின் பட்டியலில் முதலிடம் பிடித்ததால் சமந்தா தற்போது ஒரு படத்திற்கு நான்கு கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபு முகநூலில் போட்டிருக்கும் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமந்தாவின் திருமண புகைப்படங்களை வைத்து அவர் போட்டு உள்ள இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.