ஹீரோயினிகளுக்கு டப் கொடுக்கும் பிரபல குழந்தை நட்சத்திரம்…. ஆளே அடையாளம் தெரியல…. செம வைரலாகும் ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ….!!!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்த பலரும் இன்று முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றன. அப்படி தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் யுவினா பார்த்தவி. முதலில் உறவுக்கு கை கொடுப்போம் என்ற சீரியலில் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

அதில் குழந்தையாக தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி இவர் இவன் வேற மாதிரி, வீரம், மஞ்சப்பை, ஸ்ட்ராபெரி,அரண்மனை 2 மற்றும் மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.

சூர்யாவின் மாஸ் மற்றும் அஜித்தின் வீரம் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் கலக்கி இருப்பார். அந்த படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தன. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் படங்களை நடித்துள்ளார்.

தற்போது வரை 15 க்கும் மேற்பட்ட படங்களிலும் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது மம்மி என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வருகின்றார். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இவர் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் குட்டி குழந்தையாக ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த இவர் தற்போது வளர்ந்து, இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் விதமாக செம்ம ஹாட்டான லுக்கில் ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.