டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் திருச்சி மாவட்டம் தக்கிலி அம்பேத்கர் நகரை சேர்ந்த கல்யாண். இவர் அடிக்கடி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.இவர் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவரை டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இதரிடையே சில மாதங்களாக விமலா சோகமாக இருந்துள்ளார். அதனால் ஏன் என்று கல்யாண் விமலாவிடம் கேட்க,அதற்கு விமலா விசாகப்பட்டினத்தை சேர்ந்த வித்தியா ஸ்ரீ என்பவர் தன்னை சந்தித்ததாக கூறியுள்ளார். அதாவது கல்யாண் விமலாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் சில காரணங்களால் இருவரின் உறவும் முறிந்து போனது.அதனால் அவரை மறந்து கல்யாண் விமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் திடீரென வாழ்க்கைக்குள் நுழைந்த நித்யா ஸ்ரீ கல்யாண் இல்லாமல் தன்னால் வாழ முடியவில்லை என விமலாவை சந்தித்து பேசியுள்ளார்.எங்களை எப்படியாவது சேர்த்து வைத்து விடுங்கள் என்று கெஞ்சியுள்ளார்.
அதனால் விமலா எந்த ஒரு மனைவியும் செய்யாத பெரிய தியாகத்தை செய்ய தயாராகி விட்டார்.அதாவது தனது கணவர் கல்யானை அவர் காதலித்த நித்தியா ஸ்ரீ என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் விமலா. அது மட்டுமல்லாமல் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து முதல் மனைவி முன்பே கல்யாண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனைப் பார்த்த பலரும் சினிமாவில் தான் இப்படி நடக்கும் ரியல் லைஃப்லும் இப்படி நடப்பது இதுதான் முதல் முறை என்று பலரும் ஆச்சரியத்துடன் கமாண்ட் செய்து வருகிறார்கள்.