“எனக்கும் அந்த மாதிரி நடந்திருக்கு”…. உண்மையை பட்டென போட்டுடைத்த நடிகை விஜயலட்சுமி….!!!!

தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம் மற்றும் கற்றது கையளவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். என்னதான் படத்தில் நடித்திருந்தாலும் இவரை பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இதற்கு அடுத்தபடியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கலக்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இவர் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.

\

அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் விஜயலட்சுமி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி இணையத்தில் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது சிறுவயதில் கராத்தே கற்றுக்கொள்ள சென்றபோது அந்த ஆசிரியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். உடல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார்.

சில நடிகைகள் வாய்ப்பிற்காக இளைஞர்கள் தயாரிப்பாளர்களிடம் பேரம் பேசுவதால் அனைத்து நடிகைகளிடமும் அதனை எதிர்பார்க்கிறார்கள். விருப்பமில்லாத நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக சூழ்நிலை அமைப்பது நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே குட் டச் மற்றும் பேட் டச் எது என்பதை சொல்லிக் கொடுத்தால் இது போன்ற சூழல்களில் பாதுகாப்பாக இருப்பார்கள் என விஜயலட்சுமி ஓபன் ஆக பேசியுள்ளது சினிமாவில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.