தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம் மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 10 தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் அவ்ப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றியதன் மூலம் காதல் மலர்ந்துள்ளது. இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டதால் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இருந்தாலும் இதுவரை திருமணம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இவர்கள் வெளியிடவில்லை. இந்நிலையில் மஞ்சுமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் ஜோடியாக திருமண நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கௌதம் கார்த்தியின் நெருங்கிய நண்பரான கோபி என்பவரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஏற்கனவே இருவரும் காதலித்து வருவதாக வதந்தி பரவி வரும் நிலையில் அந்த தகவலை உறுதி செய்யும் வகையில் இருவரும் ஒன்றாக சென்றுள்ளது இருவருக்கும் இடையே ஆனால் காதலை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.