தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் ஏ ஆர் ரகுமான். ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்து என்ற எல்லையையும் கடந்து ஹாலிவுட் வரை சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். ஏராளமான விருதுகளையும் வாங்கியுள்ளார்.

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்தத் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.மேலும் இப்படத்தில் இருந்து வெளியான 2 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை கௌரவிக்கும் விதமாக கனடாவின் மார்க்கம் என்ற நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
