தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகர் அஜித். ரசிகர்களால் அன்பாக தல என்று அழைக்கப்படுகிறார். அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.முதன் முதலாக அமராவதி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் தடம் பதித்தார் அஜித்.

அதனைத் தொடர்ந்து ஆசை, வான்மதி, காதல் கோட்டை மற்றும் உல்லாசம் போன்ற பல்வேறு படங்கள் வெற்றி வாய்ப்பை கொடுத்தன. அதிலும் குறிப்பாக அவர் நடித்த காதல் மன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்ததால் மேலும் பிரபலமானார் அஜித். அவர் பெரும்பாலும் காதல் திரைப்படங்களில் மட்டுமே அந்த காலத்தில் நடித்து வந்தார்.

அவ்வகையில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது.சரண் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் அஜித்தின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

அந்தத் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஷாலினியும் முக்கிய கதாபாத்திரத்தில் ரகுவரன் மற்றும் நாசர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். அப்படம் வெளியான பிறகு அஜித்தின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. இந்தத் திரைப்படம் முடிந்த பிறகு தான் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இப்படி பல்வேறு சுவாரசியங்களை கொண்ட இந்த திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் இயக்குனர் சரண் இந்த படம் வெளியான பின்பு ஒரே நாளில் அஜித்திற்கு 25 ஆயிரம் ரசிகர்கள் மன்றங்கள் திறக்கப்பட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.இதனை அறிந்த மற்ற நடிகர்கள் அப்படியே ஆடிப் போய்விட்டனர் என்று தெரிவித்துள்ளார். அஜித் கேரியரில் மிகவும் பிரபலமான படம் அமர்க்களம்.
