“திருமணத்திற்கு பிறகு இரண்டரை வருடம்”…. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?…. எமோஷனலாக பேசிய விஜே மணிமேகலை….!!!

சன் மியூசிக் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளனியாக வளம் வந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் விஜே மணிமேகலை. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.பிரியா வீடு மற்றும் வெட்டி பேச்சு உள்ளிட்ட இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதரிடையே மணிமேகலை தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஹுசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சிறிது நாட்களிலேயே அவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து விலகினார்.அது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் பிறகு நீண்ட நாட்கள் கழித்து விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார். அவ்வகையில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்கினார்.

பின்னர் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் மணிமேகலை தனது கணவருடன் போட்டியாளராக கலந்து கொண்டார். பின்னர் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக மாறினார் மணிமேகலை.இருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான். அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் மணிமேகலை அண்மையில் தனது சினிமா பயணம் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் நாங்கள் மாதத்திற்கு ஏழு கோடி முதல் 35 கோடி வரை சம்பாதிப்பதாக ஒரு மீம் வந்திருந்ததை பார்த்தேன். ஆனால் நான் திருமணமான முதல் இரண்டரை வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டேன் . BMW கார் வாங்கிய போது எங்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது ஆனால் இரண்டு மாதம் நாங்கள் டியூ கட்டவில்லை. அதனால் காரை எடுத்துப் போவதாக சொன்னார்கள். அதெல்லாம் உங்க யாருக்குமே தெரியாது என்று கூறி மணிமேகலை எமோஷனலாக பேசியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.