“விஜய் இது உங்களுக்கு தான்”…. அந்த பாட்டுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட மன்சூர் அலிகான்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.வம்சி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் தாஸ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,யோகி பாபு மற்றும் சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு  அறிவித்துள்ளது.

வாரிசு திரைப்படத்தில் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் ப்ரோமோ நவம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் நவம்பர் 5ஆம் தேதி அந்தப் பாடல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வகையில் ரஞ்சிதமே என தொடங்கும் வாரிசு திரைப்படத்தின் பாடலை விஜய் பாடியுள்ளார். ப்ரோமோவில் இடம் பெற்றுள்ள இரண்டு வரிகளை கேட்டவுடன் பிடிக்கும் வகையில் இருந்ததால் பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட் பிடிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ரஞ்சிதமே பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.