BIGG BOSS 6 எப்போது தெரியுமா?…. இவர்கள் தான் போட்டியாளர்கள்….. வெளியான தகவல்……!!!!

விஜய் டிவியில் விரைவில் ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 6- இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அவ்வளவு விறுவிறுப்பான நிகழ்ச்சி இது.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சர்ச்சையில் சிக்குவதை ரசிப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது என்றால் மறுபக்கம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமும் உள்ளது. தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில்  சீசன் 6 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் 6வது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் வருகின்ற அக்டோபர் 2ம் தேதி முதல் பிக்பாஸ் 6வது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீசனில் விஜய் டிவி பிரபலங்களான டிடி, CWC சுனிதா, சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.