எங்ககிட்ட உங்க பாஷா பலிக்காது….. “வெறும் 30 நிமிடத்தில்”…. பதறவிட்ட Tamilrockers….. என்ன நடந்தது?…..!!!!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமாக திகழும் ஏவிஎம் தமிழ் ராக்கர்ஸ் இணைய தொடர் மூலமாக மீண்டும் தயாரிப்பிற்கு தற்போது திரும்பி உள்ளது. அதன்படி முதல் வெப் சீரியஸ் ஆக தமிழ் ராக்கர்ஸ் என்ற தொடரை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழும் அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இதனை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய நிலையில் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து நேற்று முன்தினம் இரவு சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

தமிழ் ராக்கர்ஸ் தொடருக்கான டீசரை தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் வெளியிட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் தொடர் முற்றிலுமாக தமிழ் சினிமா துறவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் திருட்டு இணையதள நிறுவனமான தமிழ் ராக்கர்ஸ் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த இணையதளம் எவ்வாறு இயங்குகிறது, எப்படி புதிய திரைப்படங்களை தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறது அதற்கு பின்னால் இருக்கும் வியாபாரம் என்ன இதன் மூலமாக சினிமா துறையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து இந்த திரைப்படத்தில் முழுவதுமாக விளக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் வெளியான 30 நிமிடங்களுக்குள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஒரே சமயத்தில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.அறிவழகன் இயக்கி அருண் விஜய் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் திரைப்படங்களை முறைகேடாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் பற்றியது. தங்களை விமர்சிக்கும் தொடரை அவர்களே வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர்.