தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி.இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். நானி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஷியாம் சிங்காராய் .

இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் சாய்பல்லவி நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் திரைப்படத்தின் கதையும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்கார் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் இந்த திரைப்படம் மூன்று பிரிவுகளில் இணைந்துள்ளது. அதன்படி சிறந்த பீரியாடிக் படம்,பின்னணி இசை மற்றும் சிறந்த கிளாசிக்கல் கல்ச்சுரல் படம் என்று மூன்று பிரிவுகளின் கீழ் இணைந்துள்ளது.

இந்தத் திரைப்படம் 1970களில் கொல்கத்தாவில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. அதிக பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் நல்ல வசூலையும் பார்த்தது. இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது ஆஸ்கார் விருதுக்கும் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.
