விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இருந்தாலும் விஜய் டிவி கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் காமெடிகளுக்கு அளவே இல்லை. அந்நிகழ்ச்சியை தொடங்க இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது சபாபதி, வலிமை, யானை மற்றும் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளும் இவர் கைவசம் வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் புகழ் 5 வருடமாக காதலித்து வந்த பெண்சி என்பவரை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் திருமண நாளில் தன் மனைவியோடு சேர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது மட்டுமல்லாமல் வடிவேலு பாலாஜி தான் எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்து புகழ் ஒரு பதிவை பதிவிட்டு வந்தார்.

அந்த பதிவு பலரையும் கலங்க வைத்த நிலையில் தற்போது புகழ் மற்றொரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், நீங்கள் எங்களோடு இல்லாமல் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் இல்லை என்று என்னால் நினைக்க முடியவில்லை. என் வாழ்க்கைக்கு வழிகாட்டி நீ தான் மாமா, முக்கிய தருணங்களில் இல்லாமல் போய்விட்டாயே, இதனை எழுதும்போதே என் கண்கள் கலங்குகின்றன மிஸ் யூ மாமா என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் . அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
