90 களில் தொடங்கி 20 கல் வரை தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட நடிகைகள் என்று இவர்களை கூறலாம். அந்த அளவிற்கு அனைவரின் மனத்திலும் இடம் பிடித்தவர்கள் இந்த இரண்டு நடிகைகள் என்று சொல்லலாம், அந்த அளவிற்கு இவர்கள் பிரபலமானவர்கள். இவர்கள் இனைந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் தான் நடிகை நக்மா மற்றும் நடிகை ஜோதிகா.. பல விதமான தோற்றங்களில் தோன்றி நம்மை ரசிக்க வைத்துள்ளார்கள் இவர்கள் என்று சொல்லலாம். குறிப்பாக நக்மா நடித்த சிடிஸின் என்ற படம் அவரை நம்மள மறக்கவே முடியாத அளவிற்கு நம்மிடம் பதிந்து போன ஒரு கதாபாத்திரம் ஆகும். மேலும் ஒரு கால கட்டங்களில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக நடிகை நக்மா மற்றும் ஜோதிகா ஆகியோர் திகழ்ந்தனர்.

இருவரும் திருமணம் முடித்த பின்னர் குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டனர். எனினும், நடிகை ஜோதிகா தற்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தெரிவு செய்து நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.. நடிகை ஜோதிகா அவரின் அக்கா நக்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..

குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை நக்மாவா இது என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். ரசிகர்களினால் அடையாளம் கண்டுப்பிடிக்க முடியாத அளவு அவர் மாறியுள்ளார். ஒரு சில நடிகைகள் மட்டும் தான் பார்க்க அப்டியே உள்ளனர். ஆனால் பலர் அடையாளம் தெரியாமல் மாறிவிடுகின்றனர் என்று தான் கூற வேண்டும்.