தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தர்வாகியில் தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை மீராவாசுதேவன்.தமிழில் அவர் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில்மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.எந்த படமும் சரியாகி போகவில்லை.ஒரு நிரந்தர நாயகியாக அவர் ஒரு இடத்தாய் அடைய முடியவில்லை.

இவர் தமிழில் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் இவர் அறிமுகமானது மலையாளத்தில்தான்.மோகன்லாலுடன் இணைந்து தன்மாத்ரா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.மலையாளத்திலும் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அதிகமான படவாய்ப்புகள் இல்லாததால் கையிலிருக்கும் ஒரு சில படங்களில் நடித்துவருகிறார்.2005 ஆம் ஆண்டு விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் கருது வேறுபாடு காரணமாக 2010ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

பின்பு 2012ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஜான் கொக்கன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர் உடனுமான திருமண வாழ்க்கையும் இவருக்கு சரியாக அமையவில்லை.2016 ஆம் ஆண்டு இவரையும் விவாகரத்து செய்தார்.தற்போது இவருக்கு ஒரு மகன் மட்டும் உள்ளார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் இவரது மேனேஜர் மீது பல புகார்களை அடுக்கியுள்ளார்.தனது தனிப்பட்ட விஷயங்களுக்கு தன்னை பயன்படுத்திக்கொண்டதாகவும் பல நல்ல வாய்ப்புகளை தன்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.மேலும் மொழி பிரச்சனை இருந்ததால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை எனவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
