கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. மாஜி ஹீரோயின் தேவிகாவின் மகள். தமிழ், மலையாளத்தில் உள்ள அத்தனை டாப் ஹீரோக்களுக்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 75 படங்கள் வரை ஹீரோயினாக நடித்தார். 2004ம் ஆண்டு குஸ்ருதி என்ற மலையாளப்படத்தில் கடைசியாக நடித்தார். தமிழில் கடைசியாக நடித்தது சிம்மராசி.

அம்மா தேவிகாவின் மரணத்திற்கு பிறகு கனகாவின் வாழ்க்கையே திசை மாறியது. மகளை வெளி உலகம் தெரியாமல் பொத்தி பொத்தி வளர்த்தார். அதனால் அவரது மறைவுக்கு பிறகு கனகாவால் வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள முடியவில்லை. அம்மா தேவிகாவால் புறக்கணிக்கப்பட்ட அவரது தந்தையும் அவருக்கு ஆறுதலாக இல்லை. இந்த நிலையில் கரகாட்டக்காரன் புகழ் கனகாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என ஏகப்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது திருமண வாழ்க்கையில் பல சர்ச்சைகள். 2007ம் ஆண்டு முத்துக்குமார் என்ற பொறியாளர் ஒருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் முத்துக்குமார் என்பவர் யார் என்றே தெரியாது என்று கூறியிருந்தார்.பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் கனகா மிகவும் மன அழுத்தத்தில் உள்ளாராம். அண்மையில் வெளியாகிய அவரது புகைப்படங்கள் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு பார்க்கவே பரிதாபமாக உள்ளார்.
