நியூயோர்கின் Manhattan-ல் வசித்த பெண் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் அடுக்குமாடி வீட்டுக்கு மகன் சென்றார். அங்கு இருக்கும் உடைமைகளை எடுக்கவும், வீட்டின் நிலையை காணவும் சென்றார். அப்போது வீட்டில் இருந்த freezer-ஐ திறந்து பார்த்து போது உள்ளே அ ழுகி ய நிலையில் சடலம் இருப்பதை பார்த்து அ திர்ச் சியடைந்த அவர் கத்தினார்.

அவர் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள். அந்த சடலமானது 10 வருடங்களாக அங்கு இருந்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். மேலும் freezerல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த சடலம் ஆணா அல்லது பெண்ணா என இன்னும் தெரியவில்லை.

அங்கு வசித்த பெண் சாந்தமானவர் எனவும், அவர் வீட்டில் இப்படி ஒரு சடலம் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அருகில் வசித்தவர்கள் அ திர்ச் சி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் விசாரணைக்கு பின்னரே இதன் மர்மம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.