சீரியல் நடிகை மஞ்சரி. தற்போது என்ன செய்கிறார், எங்கு இருக்கிறார் என்பது பற்றி தெரிந்துள்ளது. ”நடிகை குட்டி பத்மினி மூலமா ‘உறவுகள்’ சீரியலில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. என்னுடைய சொந்த ஊர் சிங்கப்பூர்தான். இந்த சீரியலுடைய ஷூட்டிங் 50% சிங்கப்பூர்லயும், 50% இந்தியாவிலும் நடந்துச்சு. அதுதான் தமிழில் என்னுடைய முதல் சீரியல். அதுக்கப்புறம் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தது. தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழி சீரியலிலும் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சீரியலில் நடிச்சிருப்பேன்” என்றவர் தான் நடித்ததில் தனக்குப் பிடித்தமான கதாபாத்திரம் பற்றிச் சொன்னார்.


”எனக்கு பாஸிட்டிவ், நெகட்டிவ்ன்னு ரெண்டு ரோலில் நடிக்கிறதுக்கும் வாய்ப்பு கிடைச்சது. பிளஸ்ஸோ, மைனஸோ எனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை திருப்தியா நடிக்கணும்னு விரும்புவேன்.ஆனா, எனக்கு ரொம்ப பொருத்தமான ரோல்னா அது ‘நெகட்டிவ்’ ரோல் தான். ஏன்னா, அந்த ரோல் மூலமாதான் நம்முடைய திறமையை வெளிக்காட்ட முடியும். சில சமயம், ஹீரோயின்களைவிட வில்லி கேரக்டர்ல நடிக்கிறவங்க பாப்புலர் ஆகிடுவாங்க. அந்த கதாபாத்திரத்துக்குதான் மக்கள்கிட்ட வரவேற்பு அதிகமா கிடைக்கும். அவங்க திட்டுறதுதான் எங்க பலம். வயித்துல என் குழந்தையை சுமந்துட்டு இருந்த நேரத்துல கோலங்கள் சீரியல்ல இருந்து விலக வேண்டியதா இருந்தது.


இப்போ குடும்பத்தோட சிங்கப்பூர்ல வாழ்ந்துட்டு இருந்தாலும், இன்னமும் என் கேரியரை விடல. இங்கே சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன். அதே மாதிரி ஒரு டேலண்ட் ஷோவுக்கு ஜட்ஜாவும் இருக்கேன். தமிழ் சீரியலில் நடிக்கிறதுக்கு ஆர்வமா தான் இருக்கேன். ஆனா, இப்போவரைக்கும் வாய்ப்புகள் வரல. ”அது, ‘அண்ணாமலை’ சீரியல் நடிச்சுட்டு இருந்த நேரம். ஒரு நிகழ்ச்சிக்கு என்னைச் சிறப்பு அழைப்பாளரா கூப்டாங்க. நானும் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சி நடந்த இடத்துல முதல் இருக்கையில் உட்கார்ந்து இருந்தேன். திடீர்னு என் முன்னாடி ஒரு சேர் பறந்து வந்து விழுந்துச்சு.

என்னவோ, ஏதோன்னு பதறி வேகமா எழுந்து திரும்பிப் பார்த்தா, ஒரு அம்மா என்னை அந்த சீரியல் கதாபாத்திரத்தைச் சொல்லி என்னைத் திட்டிட்டு இருந்தாங்க. அந்த இடத்துல எனக்குக் கொஞ்சம்கூட கோபம் வரலங்க.. சிரிப்புதான் வந்துச்சு. நான் மஞ்சரி பொண்ணு இல்ல; மஞ்சரி தான்’னு சொன்னேன். அடடா… அந்த அளவுக்கா தோற்றத்தில் மாறிட்டோம்னு நினைச்சு எனக்குள்ளேயே சிரிச்சுகிட்டேன். இவ்வளவு பேர் புகழ் வாங்கிக் கொடுத்த தமிழ் சீரியல்ல ரீ என்ட்ரி ஆகணும்