என்னோட கடைசி ஆசையா மட்டும் நிறைவேற்றுங்க..!! பறவை முனியம்மாவின் மனதை உருக்கும் கோரிக்கை

மதுரை அருகேயுள்ள பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா. இன்றளவும், இவரின் நாட்டுப்புற பாடலுக்கென்று தனி மவுசு உண்டு. சினிமாவில் பாடி ஆடி நடிக்கவே, ஒரு நடிகையாக, நாயகர்களுக்கு அம்மாவாக, பாட்டியாக கொண்டாடினார்கள்.

கிராமத்து பாடல் இப்படி சிரிப்பு, பாட்டு, நடிப்பு என்று உற்சாகமாக இருந்த முனியம்மாவை வெளி நாட்டு தமிழர்களும் அழைத்து பாட வைத்து ரசித்தார்கள், கொண்டாடினார்கள். இவ்வாறு புகழில் வாழ்ந்த பரவை முனியம்மா இன்று வாய்ப்புகள் இல்லாமல், வயோதிகம் கொடுத்த நோயின் காரணமாக மிகவும் வறுமையில் வாடி வருகிறார். இதனால், இவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைப்பு நிதியாக 6 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தார். இதன் மூலம் இவருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைத்து வந்தது.

இந்நிலையில், தனது மாற்றுதிறனாளி மகனுடன் வசித்து வரும் பரவை முனியம்மா, தற்போது பேட்டி ஒன்றில் பேசிய போது, தனது உடல் நலம் சரியில்லை என்றும், தனக்கு வழங்கி வரும் நிதி உதவியை தனது இறப்புக்கு பிறகு தனது மாற்றுத்திறனாளி மகனுக்கு வழங்க வேண்டும் என்றும் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
உடல் நிலை சரி இல்லாத நிலையில் கண்ணீருடன் பறவை முனியம்மா வைத்த மனதை உருக்கும் கோரிக்கை…!