ஒட்டுத்துணியின்றி ஆயில் மசாஜ்..!! மாத விடாய் என்று சொன்னால் கூட விடமாட்டார்.. பயத்தில் அழுவேன்… கல்லூரி மாணவியின் பகீர் வாக்குமூலம்

இந்தியாவில் முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்தா தன்னை எப்படி துன்புறுத்தினார் என கல்லூரி மாணவி கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா, அவரது சட்டக்கல்லூரியில் படித்த மாணவி அளித்த புகாரின் பேரில், கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சின்மயானந்தா தன்னை எப்படியெல்லாம் கொடுமை செய்தார் என்பதை அந்த மாணவி பொலிசில் வாக்குமூலமாக கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், முதன்முதலாக அவரது அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டபோது, தனது அருகில் அமரும்படி சொன்னார் சின்மயானந்தா. அப்போது, நான் உனக்கு ஒன்றை காண்பிக்கப்போகிறேன் என்றவர், அவரது செல்போனை பார்க்கச் சொன்னார். அதில், நான் ஆடைகளின்றி குளித்துக்கொண்டிருந்த வீடியோ ஓடியது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அழத் தொடங்கினேன். அவர் சிரிக்கத் தொடங்கினார். அழாதே, எனது தேவைகளை தீர்த்து வைத்தால் போதும், இதை வெளியே விடமாட்டேன். இல்லை என்றால் இந்த வீடியோ வைரலாகும்.

உனது குடும்பத்தை சீரழித்துவிடுவேன் என்று மிரட்டினார். பிறகு ஒட்டுத்துணியின்றி ஆயில் மசாஜ் செய்ய சொன்னார். மறுத்தேன். உதைத்தார். மிரட்டினார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. தினமும் என்னை அழைத்து செல்ல அவர் பாதுகாவலர்கள் வந்துவிடுவார்கள், எனக்கு பயமாகவே இருக்கும். சின்மயானந்தா அறைக்கு சென்றவுடன் என்னை மகள் என அழைத்து தவறாக நடந்துகொள்வார்

எனக்கு மாத விடாய் என்று சொன்னால் கூட விடமாட்டார். அவரை ஆதாரத்துடன் சிக்க வைக்க முடிவு செய்து கமெராவுடன் இருக்கும் மூக்கு கண்ணாடியை வாங்கினேன். பிறகு அவர் செய்யும் கொடுமைகளை வீடியோ எடுத்தேன். அப்படி தான் அவரை சிக்க வைத்தேன் என கூறியுள்ளார்.