பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருபவர்கள் தர்ஷன் மற்றும் முகென் தான். ஆனால், நேற்று இறுதியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு சிறிய ப்ரோமோவில் முகேன் கட்டிலை உடைத்து அவரின் உச்சக்கட்ட கோபத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இன்றைய முதல் ப்ரமோவில் முகேன், சாக்க்ஷி, அபிராமி ஷெரின் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கையில் அபிராமியிடம், சாக்க்ஷி ‘நான் முகனிடம் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா’ என்று கேட்டகிறார். இதனால் உனக்கு அபிராமி எப்போதும் நீ உன்னை பற்றி மட்டும்தான் பேசுவாயா என்று அந்த இடத்தை விற்று கோபமாக சென்று விடுகிறார்.
இதை வைத்து பார்க்கும்போது இதற்குப் பின்னர் முகேன் அபிராமியை சமாதானம் செய்ய முற்படும்போது, கோபமடைந்த முகேன் கட்டிலை அடித்து உடைத்து உள்ளாரோ என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
#Day43 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/9TnB53qdbF
— Vijay Television (@vijaytelevision) August 5, 2019