பிரபல சேனலில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரங்களான ஸ்டாலின், வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், ஹேமா விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இந்த சீரியலில் ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் பாச போராட்டங்கள், மனஸ்தாபங்கள், கணவன் மனைவி போராட்டங்கள் போன்றவை இதில் வெளிக்காட்டி வருகின்றனர். இதில் மூன்றாவது ஜோடியாக நடிப்பவர் கதிர், முல்லை என்கிற குமரன் மற்றும் சித்ரா. இவர்களின் காதல் காட்சிகளுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் ஒன்று உள்ளது.ஆனால் இவர்கள் இருவரும் நேரில் எலியும் பூனையும் போன்று இருப்பார்களாம்.

இதுகுறித்து சித்ரா கூறும்போது, நான் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பேன், நான் என்னுடைய குறிக்கோளை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறேன், அவர் அவருடைய பாதையில் சென்று கொண்டிருக்கிறார். மற்றபடி எங்கள் இருவருக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிஉள்ளார்.
