சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி வருபவர் தான் நடிகர் யோகிபாபு. விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டவருக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கால்ஷீட் இல்லாத அளவுக்கு ரொம்ப பிஸி ஆகிவிட்டார்.இந்நிலையில் சமீப நாட்களாக அவரது சம்பளம் மற்றும் திருமணம் குறித்த வதந்திகளும் அடிக்கடி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால், யோகி பாபுவோ, நானே சொல்லுறேன் அவசரப்படாதீங்க என கூறி தன் குடும்பத்திற்கு ஏற்ற பெண் தேடி வந்தார். இதையடுத்து,அவரை இதை பற்றி கூறிய தகவல் இப்பொழுது கசிந்து உள்ளது. தற்போது அவர் எதிர்பார்த்தபடியே தனக்கான துணையை தேடிவிட்டார். ஆம், பெற்றோர் பார்த்த பெண் தான். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்பவராக தேடினேன்.

அதேபோல் எனக்கான பெண் கிடைத்துவிட்டார்” என பார்கவி பற்றி யோகி பாபு தெரிவித்தார். இவர்களது திருமணம் பிப்ரவரி 5ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறவிருக்கிறது.இந்த தகவலை கேட்ட உடனே அனைவரும் ஆச்சரியத்தில் இந்த தகவலை அனைவருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.