கொழு கொழுன்னு இருந்த 90ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளினி சுவர்ணமால்யாவா இது? ப்பா சூப்பரா ஆயிட்டாங்களே.. போட்டோ உள்ளே

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாகவும் வெள்ளித்திரையில் சில படங்களிலும் தலை காட்டி பிரபலமானவர் சொர்ணமால்யா.  “அலைபாயுதே” திரைப்படத்தில் சாலினியின் அக்காவாக அறிமுகமானவர் முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் வர நடித்து தள்ளினார்.ஆனால் சொர்ணமால்யாவின் மகிழ்ச்சி சிறிது காலத்திலேயே இல்லாமல் போனது.


பொய்யான காதலில் சிக்கிய இவர் காதலாலே அவமானப் படுத்தப் பட்டார். இவரது சில வீடியோக்கள் வெளியாகி சொர்ணமால்யாவிற்கு ரசிகர்களிடம் இருந்த மதிப்பை பறித்தது. இதனால் மனமுடைந்தவர் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பரதநாட்டியம் கற்றிருந்த சொர்ணமால்யா குழந்தைகளுக்கு பரதம் கற்றுக் கொடுப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பரதநாட்டிய பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ள சொர்ணமால்யா ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக பரதம் சொல்லி கொடுக்கிறார்.

ஆரம்பத்தில் ஸ்லிம்மாக இருந்த இவர் அதன் பின்னர் வெய்ட் போட்டு குண்டான உருவமைப்பிற்கு மாறினார். அப்படியிருந்தும் பார்ப்பதற்கு அழகாகவே தோற்றமளித்தார். இந்நிலையில் தற்போது சொர்ணமால்யா தன்னுடைய உடல் எடையை ஓரளவிற்கு குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.