பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விளையாட்டாக போட்டியாளர்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போது, அப்போது சேரன் மீராவின் இடுப்பை பிடித்து துக்கியதாகவும், என்னை பிடிக்காத காரணத்தினாலே அவர் இப்படி செய்ததாக பகிரங்கமாக போட்டியாளர்கள் அனைவர் முன் கூறினார். என்ன தான் இருந்தாலும் ஒரு பெரிய டைரக்டர், அதுக்காகவாது மரியாதை கொடுத்து அவரை தனியாக அழைத்து நீங்கள் இப்படி செய்தீர்கள் அது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கலாம். ஆனால் மீராவோ அனைவர் முன் கூறியதால், சேரன் கூனி குறுகி போய்விட்டார். இதனால் சமூகவலைத்தளங்களில் இணையவாசிகள் மீராவை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தான் மீரா வேறு யாரோ ஒருவருடன் இடுப்பை பிடிப்பது போன்று போஸ் கொடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக, இதைக் கண்ட இணையவாசிகள் இப்போது மட்டும் ஒன்னுமில்லையா மீரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
