தமிழ் சினிமாவில் சில காலங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை பாவனா. இவர் தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பிறகு வெயில், தீபாவளி, கூடல் நகர், அசல் என பல படங்களில் நடித்துள்ளார். நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். சென்ற வருடம் கன்னட தயாரிப்பாளர் நவீனுடன் காதலாகி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பு அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. சிறிது காலம் சினிமாவில் விட்டு விலகி இருந்த பாவனா, மீண்டும் தமிழில் வெற்றிபெற்ற 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்திருந்தார்.
தற்போது பஜிராங்கி படத்தின் 2 ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் கழுத்தில் தாயத்து , நெற்றியில் பொட்டு, விரிந்த கோலத்தில் தலைமுடி என மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார்.
