திருமணமாகி 14 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை! புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ந்த பிரபல நடிகர்-நடிகை!

மலையாள திரையுலகில் இயங்கிவரும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் குஞ்சக்கோ போபன். இவர் நடித்த பல்வேறு மலையாள திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளன. இவர் நடித்து சமீபத்தில் வெளியான “அஞ்சாம் பத்தீரா” என்ற திரைப்படம் 10-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இந்த திரைப்படமானது அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவருடைய மனைவியின் பெயர் பிரியா. இருவருக்கும் 2005-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2019-ஆம் ஆண்டில் இருவரும் “இசா” என்ற

ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். இந்நிலையில் தற்போது வெளியான படத்தை பிரபல மாலில் அமர்ந்துகொண்டு “இசா” பார்ப்பது போன்று வெளியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.