திருமணமான 5 நாளில் புதுப்பெண்ணை பார்த்து அலறி துடித்த மாமியார்…கணவன் இல்லாத போது நடந்த விபரீதம்

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சேதுபதி (22). இவருக்கும் சிவசக்தி (18) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சேதுபதி தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் மனைவியுடன் குடியிருந்து வருகிறார். கீழ்தளத்தில் சேதுபதியின் பெற்றோர் வசிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து சேதுபதி வெளியே சென்ற நிலையில் சிவசக்தி மட்டும் தனியாக இருந்தார். நீண்ட நேரமாகியும். மாடியில் இருந்து சிவசக்தி கீழே வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவருடைய மாமியார் புஷ்பவள்ளி, மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தார். அப்போது, மின் விசிறி பொருத்துவதற்காக அமைக் கப்பட்டிருந்த கொக்கியில் சுடிதார் துப்பட்டாவால் சிவசக்தி தூக்கிட்டுள்ளார். இதனை கண்ட புஷ்பவள்ளி அலறி துடித்து நிலையில் கதறி அழுதார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், சிவசக்தியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிவசக்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்