தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி முருகன் பதற்றமே இல்லாமல் வெளியில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைரநகைகளை அள்ளி சென்றனர் கொள்ளையர்கள். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி முருகனை கைது செய்யமுடியாமல் பொலிசார் இன்னும் திணறி வருகிறார்கள். இந்நிலையில் இன்னொரு குற்றவாளியான சுரேஷ் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த சுரேஷ், நடந்த கொள்ளைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

என் மீது சில கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதையே காரணம் காட்டி இந்த வழக்கிலும் என்னைத் தொடர்புபடுத்தப் பார்க்கிறார்கள். விசாரணை என்கிற பெயரில் பொலிசார் எனது குடும்பத்தையும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறார்கள். எனது அம்மா கனகவல்லி மற்றும் அப்பா ஆகியோரைக் கைது செய்துள்ளனர் என்றார். இதையடுத்து, சுரேஷை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பொலிசார் சுரேஷை தீவிரமாக தேடிவந்த நிலையில் அவர் எந்த பதற்றமும் இன்றி ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரின் காரில், தொப்பி மற்றும் ஜீன்ஸ் பேன்ட் சகிதமாக நீதிமன்றத்தில் சரணடைந்தது எப்படி என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் அவரது குடும்பத்தாருடன் சொகுசு வேனில் ஜாலியாக ஊர் சுற்றுகிறாராம். ஏற்கனவே தன்னிடம் இருக்கும் பணத்தின் மூலம் நடிகைகளை வலையில் வீழ்த்தி அவர்களுடன் சொகுசாக முருகன் இருந்ததாக தெரியவந்தது. ஏய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள முருகனுடன் ஒரு துணை நடிகையும் தலைமறைவாக இருக்கிறாராம். யார் அந்த துணை நடிகை என்று தெரியவில்லை. கொள்ளை சம்பவத்துக்கு பின்னர் முருகன் எந்த பயமும் இல்லாமல் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தங்கியிருந்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும், பொலிசார் கையில் வைத்திருந்த புகைப்படங்களைக் காட்டி,

இவர் தானே முருகன் என விசாரித்தனர். ஆனால் அவர்களோ, இவர் முருகன் இல்லை, அவர் நல்ல ஆரோக்கியமாக பார்ப்பதற்கே வேறு மாதிரி இருந்தார் என கூறியதாக தெரிகிறது. அதாவது தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள முருகன், மருத்துவ சிகிச்சை மூலமும் பல் மற்றும் முகம் உள்ளிட்டவற்றைச் சரி செய்தும் புதிய தோற்றத்தில் உற்சாகமாக வலம் வருவது தெரியவந்துள்ளது. இதனிடையில் முருகன் தங்கியிருந்த வீட்டுக்கு பொலிசார் சீல் வைத்துள்ளதோடு அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
