இந்திய திரையுலகில் பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய குயில் போன்ற சூழலினால் ரசிகர்களே உருவாக்கியவர் சின்னக்குயில் சித்ரா. இவருடைய பாடல்களை கேட்பதற்காகவே பல லட்சக்கணக்கான மக்கள் காத்திருந்த காலம் உண்டு. இவருக்கு விஜய்சங்கர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2002-ஆம் ஆண்டில் இத்தம்பதியினருக்கு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தார்.

கணவன்-மனைவி இருவருக்குமே அந்த குழந்தையின் மீது ஏக பிரியம். ஆனால் துரதிஷ்டவசமாக 2011-ஆம் ஆண்டில் நந்தனா இறந்து போனார். துபாய்க்கு ஒரு நிகழ்ச்சிக்காக சித்ரா சென்றிருந்தபோது தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் சுவிம்மிங் பூல்லில் தவறி விழுந்து நந்தனா இறந்துபோனார். இந்த இழப்பானது சித்ராவை பெரிதளவில் பாதித்தது. சில நாட்களுக்கு முன்னர் நந்தனாவின் பிறந்தநாள் வந்துள்ளது. சித்ரா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் தன் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

அதாவது “இன்று உன் பிறந்த நாளை கொண்டாடும்போது, உன்னுடைய பல மறக்க முடியாத நினைவுகளும் எனக்கு ஏற்படுகின்றன. அன்பிற்கினிய நந்தனாவுக்கு சொர்க்கத்தில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உன்னை இழந்து எவ்வளவு தவிக்கிறோமோ அந்த அளவுக்கு நேசிக்கிறோம்” என்று பதிவு செய்திருந்தார். இந்தப் பதிவானது ரசிகர்களை பெரிதளவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.