சுஷாந்தின் ம ரணத் திற்கு அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது. பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியல்தான் அவரது மன அழுத்தம் மற்றும் ம ரணத் திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் எந்த பார்ட்டிக்கும் அவரை அழைக்காமல் ஒதுக்கி வைத்துள்ளனர்.

மேலும் அடுத்தடுத்து அவர் ஒப்பந்தமான படங்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பலமுறை தனது பேட்டிகளில் தன்னை ஏன் பாலிவுட் ஏற்க மறுக்கிறது என கேட்டிருக்கிறார். மேலும் தனக்கென சினிமா பேக்ரவுண்டு இல்லை என்றும் மக்கள் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் முக்கிய பிரபலங்கள்தான் அவரது ம ரணத் திற்கு காரணம் என சல்மான் கான் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்களை சாடி சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

இப்படியான சூழலில் சுஷாந்த் சிங் ராஜ்புட் த ற்கொ லை செய்து கொண்ட அவரது பாந்த்ரா வீட்டில் இருந்து அவரது ஐந்து டைரிகளை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயம் அந்த டைரியில் சுஷாந்த் மரணத்திற்கும் மன அழுத்தத்திற்குமான காரணம் இருக்கும் என கூறப்படுகிறது.
போலீசாரும் அவரது டைரியின் மூலம் ஏதாவது துப்பு துலங்குமா என ஆய்வு செய்து வருகின்றனர். சுஷாந்தின் ஐந்து டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் பாலிவுட்டின் பல பிரபலங்கள் அந்த டைரியில் தங்களைப் பற்றி ஏதாவது தகவல் இருக்குமோ என பீதியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
