ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் வீரத்தமிழுச்சி என பெயர் வாங்கிய ஜூலி, பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார். அது தான் அவர் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறாக இருக்க முடியும். தமிழ்நாடு முழுவதும் பிரபலமானாலும், நெட்டிசன்களுக்கு அவர் எப்போதுமே காமெடி பீஸ் தான். சும்மாவே ஜூலியை கலாய்ப்பவர்களுக்கு, காலில் சலங்கை கட்டிவிட்டது போல வெளியானது அம்மன் தாயி ட்ரைலர்.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின்னர் அதிகமான படவாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த ஜூலிக்கு மிஞ்சியது இணையத்தில் வெளிவந்த கலாய்கள் மட்டுமே !!

பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியாவுக்கு நிகராக மக்களிடம் பிரபலமானவர் ஜூலி. ஆனால், பிக்ப் ஆஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம், அவர் மீதிருந்த நல்ல பெயரை கெடுத்து விட்டது. இருந்தபோதும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை அறுவடை செய்வதற்காக அவர் ஹீரோயினாக நடிக்க முடிவு செய்து தேர்ந்தெடுத்த படம் தான் அம்மன் தாயி. ஆனால் அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை.செவிலியராக இருந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் ஜூலியின் ஆசை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூட அதை வெளிப்படுத்தியிருந்தார்.

அதேபோல், ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் ஜூலி. அதன் பின்பு அவரை தேடி வந்த வாய்ப்பு தான் அம்மன் தாயி. இந்தநிலையில் வெகுநாட்களாக ஆள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த ஜூலி தற்போது மீண்டும் மீண்டும் மக்கள் பார்வைக்கு வந்துள்ளார்.சாய்பல்லவி நடிப்பில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தில் வரும் மலரே பாடலுக்கு காற்றில் கூந்தலை பறக்கவிட்டு ஸ்டைல் காட்டியுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் இதையும் கழுவி ஊற்றி வருகின்றனர்.
— மரிய ஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) January 3, 2020