பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சேரனுக்கு இறுதியில் அடித்த அதிர்ஷ்டம் !! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் கிட்டதட்ட 10 நாட்களே உள்ள நிலையில் போட்டியாளர்கள் வெற்றி பெற சுயநலமாக விளையாடி வருகிறார்கள்.கோல்டன் டிக்கெட்டை வென்று பைனல் சென்ற முகெனை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களுக்குமே யார் கடைசி வரை செல்லப்போகிறோம் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் சேரன் வெளியேறிய நிலையில், அதற்கு முன்பு லொஸ்லியா வெளியேற வேண்டும் என்று பிக்பாஸிடம் கதறி அழுத்துள்ளார்.அதற்கு பிக்பாஸ் கண்டித்து லொஸ்லியா உங்கள் வீட்டில் உள்ளவர்களும் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென தானே கூறினார்கள். போட்டி நீங்கள் நினைப்பதுபோல் வெளியேற முடியாது. இதெல்லாம் ஒரு செயலா லொஸ்லியா எனவும் கண்டித்துள்ளார்.


மேலும், லாஸ்லியா தான் வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் திடீர் திருப்பமாக சேரன் வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஓட்டுபதிவுகள் சரியான முறையில்தான் எண்ணப்படுகிறதா இல்லை இதில் எதாவது குளறுபடி நடக்கிறதா என்பதில் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.கடந்த முறை நடந்த எலிமினேஷன் போலே இந்தமுறையும் திரும்பிவருவாரா என எதிர்பார்த்து உள்ளனர்.மேலும் இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இந்த வாரம் நாமினேஷன் புராசஸ் சற்று வித்தியாசமாக நடைபெற்றுள்ளது. காப்பாற்ற விரும்பும் நபருக்காக பச்சை மிளகாயை கடித்து சாப்பிட வேண்டும் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். அதன்படி தர்ஷன் முதல் புரமோவில் ஷெரின் மற்றும் சாண்டிக்காக பச்சை மிளகாயை கடித்து சாப்பிட்டு காப்பாற்றினார். இரண்டாவது புரமோவில் லொஸ்லியா, கவினை காப்பாற்ற வேண்டும் என பிக்பாஸிடம் கூறுகின்னார்.

அவர் அப்படியானால் பச்சை மிளகாயை சாப்பிடுங்கள் என்கிறார். உடனே, லொஸ்லியா பச்சை மிளகாயை கையில் எடுத்து வைத்துக்கொண்டு சிரித்து சிரித்து வேடிக்கை காட்டுகிறார். இதனால் கடுப்பான பிக்பாஸ், லொஸ்லியா சீரியஸாக இருங்கள், இது நாமினேஷன் புராசஸ் என எச்சரிக்கிறார். இன்று நிகழ்ச்சி சுவாரஷ்யமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். பார்க்கலாம் என்ன நடக்கும் என்பதை.